News August 6, 2025
தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News August 6, 2025
திமுகவில் இணைந்தார் கார்த்திக் தொண்டைமான்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார். EPSயின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டவர். தற்போது, இபிஎஸ் போகிற போக்கே சரியில்லை; மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அவரின் வருகை புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
News August 6, 2025
SSI குடும்பத்துக்கு MLA மகேந்திரன் ஆறுதல்

தனது தோட்டத்தில் வெட்டிக் <<17316893>>கொல்லப்பட்ட SSI-ன் <<>>குடும்பத்துக்கு அதிமுக MLA மகேந்திரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 6, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪நெருங்கும் <<17317956>>தேர்தல்<<>>.. CM ஸ்டாலினுடன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை
✪SI <<17318296>>குடும்பத்திற்கு <<>>₹1 கோடி நிதியுதவி: ஸ்டாலின்
✪பாஜகவுக்கு <<17318354>>அடிமை <<>>இல்லை.. EPS ✪₹75,000 <<17317784>>ஆயிரத்தை <<>>கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ₹80 உயர்வு ✪சென்னை <<17317797>>கிராண்ட் <<>>மாஸ்டர்ஸ் தொடர்.. தீ விபத்தால் ரத்து ✪<<17317177>>கோபி- சுதாகர் <<>> நடிக்கும் படம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று ரிலீஸ்