News February 25, 2025
கிராமி விருது பாடகி காலமானார்

கிராமி விருது பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ராபர்டா பிளாக் (88) காலமானார். Killing Me Softly, The First Time I Ever Saw Your Face உள்ளிட்ட பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ராபர்டா பிளாக். அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவர் உயிர் அமைதியாக பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 25, 2025
₹500 கோடி வசூலித்த ‘சாவா’

‘சாவா’ திரைப்படம் உலகளவில் ₹500 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், விக்கி கெளஷல்-ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸான இந்தப் படம், இந்தியாவில் மட்டும் ₹420 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
News February 25, 2025
சீமான் உயிருக்கு ஆபத்து

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால், சீமான் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்தது. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட தபெதிகவை சேர்ந்த டிங்கர் குமரனை போலீசார் பிடித்தனர். போலீஸ் பிடித்ததும் கையில் இருந்த பெட்ரோல் குண்டுகளை சாலையில் தூக்கி அவர் வீசியுள்ளார்.
News February 25, 2025
#FairDelimitationForTN ட்ரெண்டிங்

#FairDelimitationForTN என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 2026இல் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மாற்றம் செய்யும்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை 39-ல் இருந்து 31ஆக குறைக்கும் அபாயம் உள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.