News March 10, 2025
கிராம நத்தம் நில ஆவணங்கள் ‘ஆன்லைன்’ மயமாகிறது

கிராம நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்றும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் ‘தமிழ் நிலம்’ இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கிராமங்களில் உள்ள நத்தம் நில ஆவணங்களில் உள்ள பல சிக்கல்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 10, 2025
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்

தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC கணித்துள்ளது. மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 12ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
News March 10, 2025
‘தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி’

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதம் இன்று அனல் பறந்தது. இந்த விவாதத்தின் போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடப்பதாகவும், ஆனால், தற்போது தேர்தல் பயத்தில் மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்றும் அவர் தெரிவித்தார்.
News March 10, 2025
கம்பீர் நிம்மதி அடைந்திருப்பார்: அஸ்வின்

CT கோப்பையை இந்திய அணி வென்றதற்கு பாராட்டு குவிந்து வருகிறது. முன்னாள் வீரர் அஸ்வின், தனது X தளத்தில், ரோஹித் படைக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டு, கம்பீர் நிம்மதி அடைந்திருப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் கம்பீர் BGT தொடரில் ஏற்பட்ட தோல்வியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒருவேளை CT கோப்பையையும் தவற விட்டிருந்தால், அவரின் பதவிக்கே அது சிக்கலாகவே மாறியிருக்கும்.