News August 6, 2024
HCLஇல் வேலையுடன் பட்டப்படிப்பு

HCL-இல் வேலைவாய்ப்புடன் கூடிய B.Sc, B.Com, BCA, BBA பட்டப்படிப்பு வழங்கப்படும் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு SC/ST மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பில் 2022-23இல் 60% மதிப்பெண், 2023-24இல் 75% மதிப்பெண்களில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ₹3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். HCL மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
Similar News
News March 20, 2026
BREAKING: இரவில் சந்திப்பு.. கூட்டணி கணக்கு மாறுகிறது

டெல்லியில் நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்த EPS, தொகுதி பங்கீடு இழுபறி குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், பாஜக 30 தொகுதிகள் கேட்ட நிலையில், 25 தொகுதிகளை ஒதுக்குவதாக EPS தெரிவித்தததாக கூறப்படுகிறது. அதேபோல், பாமகவுக்கு 22, அமமுகவுக்கு 6, தமாகாவுக்கு 3 தொகுதிகளையும் அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என தெரிகிறது.
News March 20, 2026
விஜய் டெபாசிட்டை இழப்பார்: அர்ஜூன் சம்பத்

அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும் வேலையைத் தான் தவெக செய்வதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆனால் தவெகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டு தவெகவை இயக்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 20, 2026
முடி உதிர்வு கவலை இனி வேண்டாம்!

முடி உதிர்வை தடுக்க சிம்பிளான சில டிப்ஸ் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ➤வேப்ப எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு முடியின் வேர்களில் மசாஜ் செய்யலாம். ➤1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெயை கலந்து உச்சந்தலையில் தடவலாம். ➤1 முட்டை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முடியில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு கழுவவும்.➤வெந்தயத்தை ஊறவைத்து பேஸ்டாக அரைத்து முடியின் வேர்களில் தடவலாம். Share it


