News December 29, 2024

அனைத்து அரசு பஸ்களிலும் விரைவில் ஜிபிஎஸ்

image

அனைத்து அரசுப் பஸ்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக இந்தத் திட்டம், சென்னையில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தி.க தலைவர் வீரமணி கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து கேரள மாநிலம் வைக்கத்திற்கு 2 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 23, 2026

35% மானியத்தில் ₹1 கோடி வங்கி கடன்.. தமிழக அரசு அழைப்பு

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே மின் சலுகையை அறிவித்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைத்து விடுத்துள்ளது. இத்திட்டத்தில் பெறப்படும் கடன்களில் 35% வரை தள்ளுபடி செய்து மானியமாக அரசே செலுத்தும். <>www.msmeonline.tn.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE

News March 23, 2026

பறவைக் காய்ச்சல்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

image

பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தற்போதுவரை கண்டறியப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் பொது சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கவனம் மக்களே!

News March 23, 2026

சிவகுமாரை கடுமையாக சாடிய ப்ளூ சட்டை மாறன்

image

வீட்டு சாப்பாட்டை மனைவி என்றும், <<19450052>>ஹோட்டல் சாப்பாட்டை நடிகை எனவும் சிவகுமார்<<>> பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் ஹோட்டல் சாப்பாடும், நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பற்றிய உங்கள் பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை மணம் செய்த உங்கள் மகன் சூர்யா இக்கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி உளறுகிறீர்கள்? என கடும் கோபத்துடன் சாடியுள்ளார்.

error: Content is protected !!