News November 1, 2025
Gpay, phonepe யூஸ் பண்றீங்களா? உடனே செக் பண்ணுங்க

Gpay, phonepe உள்ளிட்ட UPI பயனர்களுக்கு உதவ, ‘UPI Help’ என்ற ஆன்லைன் அசிஸ்டென்ட் அம்சத்தை NPCI அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் புகார்களுக்கு உடனடி பதில், பரிவர்த்தனையை டிராக் செய்வது, ஆட்டோ பேமெண்ட்டை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை எளிதாக செய்யலாம். இதனால் பணப் பரிவர்த்தனையை வேகமாகவும், பாதுகாப்பாகவும் செய்யலாம். இந்த வசதி DigiSaathi, அனைத்து UPI ஆப்களிலும் கிடைக்கும்.
Similar News
News November 2, 2025
இந்த தீர்ப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
News November 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.


