News June 26, 2024

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு பரிசீலனை

image

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். எனக் கூறிய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்த தகவலை அமைச்சர் கூறியுள்ளார்.

Similar News

News November 28, 2025

அன்புமணி செய்தது கட்சி திருட்டு: ஜிகே மணி

image

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 28, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… வந்தது அறிவிப்பு!

image

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக சற்றுமுன் செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதற்குமான ஒரே அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

ஒருவரியில் EPS-க்கு பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

image

கோபிசெட்டிபாளையத்தில் <<18410825>>பிரம்மாண்ட பரப்புரையை<<>> EPS மேற்கொள்ள உள்ளது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்’ என ஒருவரியில் பதிலடி கொடுத்தார். 3 முறை வாக்கு கேட்காமலேயே கோபி மக்கள் தன்னை வெற்றி பெற வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை ஏர்போர்ட் வந்தடைந்த KAS-க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!