News August 21, 2024

குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள அரசு தயார்: மா.சு.

image

குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது என்றார். சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் 10 படுக்கை கொண்ட வார்டு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News March 22, 2026

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

image

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக – காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியின் வில்லியனூர், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், மாஹே, காரைக்கால் வடக்கு, திருநள்ளாறில் தனித்து போட்டியிடுவதாக IUML மாநில செயலாளர் முகமது அலி அறிவித்துள்ளார்.

News March 22, 2026

ஆட்சியில் பங்கு கேட்கும் புதுவை அதிமுக

image

புதுவை NDA கூட்டணியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பளம் & உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ரங்கசாமி மீண்டும் CM ஆவதற்கு அதிமுக துணை நிற்கும் என்ற அவர், நிச்சயமாக ஆட்சியில் பங்கு கேட்போம்; தர்மத்திற்கா நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம் என்றும் கேள்வி எழுப்பினார்.

News March 22, 2026

வாழை விலை தலைகீழாக சரிவு.. விவசாயிகள் கவலை!

image

TN-ல் வாழைப்பழம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிலோ ₹55 ஆக இருந்த ஏலக்கி ₹30, பூவன் ₹25லிருந்து ₹11 என சரிந்துள்ளது. அதேபோல், 1 கிலோ கற்பூரவாழை ₹13, செவ்வாழை ₹30, நேந்திரன் ₹12-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு, ஏற்றுமதி சரிவே இதற்கு காரணம் எனக் கூறும் வியாபாரிகள் நாளொன்றுக்கு சுமார் ₹12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

error: Content is protected !!