News July 24, 2024
தனியாருடன் இணைந்து அணு உலைகள் அமைக்க அரசு முடிவு

தனியாருடன் இணைந்து சிறிய அணு உலைகள் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அணு சக்தியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, சர்வதேச நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அணுசக்தி துறையில் ஆராய்ச்சி & மேம்பாட்டு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முக்கிய தகவல்

ரேஷன் கார்ட்டில் உள்ள மொபைல் நம்பரை இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த தகவல். கிட்டத்தட்ட அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் என்றாலும், நம்பரை ஆன்லைனில் மாற்ற முடியாது. தாலுகா அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
News March 4, 2026
₹1,88,70,00,00,00,000 ஒரு மாதத்துக்கு செலவா?

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் மட்டுமே அமெரிக்கா சுமார் ₹6,900 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் ஒரு மாதத்திற்கு தொடரலாம் என டிரம்ப் எதிர்பார்ப்பதால், மொத்த செலவு ₹18.87 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ‘USS Gerald R Ford’ என்ற விமானம் தாங்கிக் கப்பலின் பராமரிப்புக்கு மட்டும் ஒரு நாளைக்கு ₹58 கோடி செலவாகிறதாம்.
News March 4, 2026
ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி: விஜய்

தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக என தஞ்சை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என அனைத்து அணிகளையும் தவெக அடித்து நொறுக்கும் என்ற அவர், தனக்கும் மக்களுக்கும் இருப்பது எலெக்ஷனால் ஏற்பட்ட பந்தம் அல்ல, இது எமோஷனால் ஏற்பட்ட பந்தம் என்றார் . மேலும், ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


