News January 24, 2025
விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர் மாளிகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநரின் தேநீர் விருந்திற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆளுநருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, காங்., விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. அதேபோல், ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று எனக்கூறிய விஜய், புறக்கணிப்பாரா அல்லது கலந்துக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News January 8, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

தொடர் உச்சத்தை எட்டிவந்த முட்டை விலை மளமளவென சரிவை சந்தித்துள்ளது. நாமக்கல்லில் இன்று 1 முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து, ₹5.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் ₹8 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை விலை, ₹7 ஆக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உங்க பகுதியில் 1 முட்டையின் விலை என்ன?
News January 8, 2026
விஜய்யால் தள்ளிப்போகிறதா சூர்யா படம்?

சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள ‘ஜன நாயகன்’ ஜனவரி இறுதி (அ) பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தால், அந்த வாரங்களில் ரிலீஸ் ஆக இருந்த சில படங்கள் பின்வாங்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்படலாம். இதேபோல், ஜன.30-ல் வெளியாக இருந்த ஜீவாவின் ‘தலைவர் தம்பி’ படமும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
News January 8, 2026
சோனியா காந்திக்கு இந்த உடல்நிலை பிரச்னையா?

சுவாசக்கோளாறு பிரச்னையால் கடந்த திங்களன்று <<18777044>>சோனியா காந்தி<<>> ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியின் காற்று மாசுபாடு மற்றும் குளிரால் அவரது ஆஸ்துமா பிரச்னை தீவிரமடைந்ததாகவும், தற்போது அவரது உடல்நலம் முன்னேறி வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.


