News August 23, 2024
ஆளுநரின் தாமதமே காரணம்: தமிழக அரசு

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க தாமதமாவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தாமதமாவதே காரணம் என உச்சநீதிமன்றத்தில் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து விசாரணை நடத்த ED கோரியது. இதையடுத்து, வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை அனுமதிகோரி எந்த தேதியில் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன? என்ற விவரத்தை 1 வாரத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
கே.என்.பாளையம் போலி கால்நடை மருத்துவர் கைது

பெரியகொடிவேரி அடுத்த கே என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் இவர் அப்பகுதியில் தனியாக கிளினிக் அமைத்து கால்நடை மருத்துவர் எனக்கூறி கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் கால்நடை நோய் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து விசாரித்ததில் அவர் போலி மருத்துவர் என உறுதியானது காவல்துறையினர் கைது செய்தனர்
News December 9, 2025
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள செங்கோட்டையனின் அண்ணன் மகன் <<18510806>>கே.கே.செல்வம்<<>>, செங்கோட்டையன் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்திருப்பதாகவும், இபிஎஸ் மீது தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் சாடியுள்ளார். மேலும், தங்கள் குடும்பம் இல்லையென்றால், 2016 தேர்தலில் சித்தப்பா(செங்கோட்டையன்) தோல்வியை தழுவி இருப்பார் என்றும் கே.கே.செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தது ஜிகே மணி தான்!

பாமகவின் உள்கட்சி பிரச்னைகளுக்கு பாஜகவே காரணம் என திமுக கூறி வந்த நிலையில், குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தான் தலைவரான அடுத்த நாளில் இருந்தே ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது அவர் தான் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.


