News August 17, 2025
கவர்னர் R.N.ரவியை மாற்றக் கூடாது.. ஸ்டாலின்

தமிழ்தாய் வாழ்த்தை மதிக்காத R.N.ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் கவர்னர் கம்பு சுத்தலாம், தமிழ்நாட்டில் கம்பு சுத்த கூடாது எனக் கூறிய அவர், R.N.ரவி தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும், அப்போதுதான் தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வார் எனத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு எதிராக சிலர் அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும் சாடினார்
Similar News
News March 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 5, மாசி 21 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News March 5, 2026
கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும், கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால், அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறி விடுமாம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News March 5, 2026
இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


