News April 10, 2025

கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டாம்: கே.பாலகிருஷ்ணன்

image

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கவர்னர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து CPM சார்பில் வருகிற 17-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News April 18, 2025

மகளிர் உரிமைத்தொகை ₹1000.. வெளியான புது அப்டேட்

image

‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்ட விரிவாக்க அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் இ-சேவை மையங்களிலும், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News April 18, 2025

மாமல்லபுரத்தை இன்று இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்

image

உலக பாரம்பரிய தினத்தையொட்டி இன்று (ஏப்.18) மாமல்லபுரத்தை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம். உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை எவ்வித கட்டணமுமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News April 18, 2025

விஜய் வருகையால் திமுக, அதிமுகவுக்கு பெரும் சவால்?

image

2021-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 234 இடங்களில் திமுக + 159 இடங்களைப் பிடித்தது. திமுக (37.7%) மட்டும் தனித்து 125 இடங்களை கைப்பற்றியது. அதிமுக + 75 இடங்களை வென்றது. இதில் அதிமுக மட்டும் (33.29%) 65 இடங்களை பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு சதவீத வேறுபாடு 5% கூட இல்லை. தற்போது விஜய் வருகையால், 2026 தேர்தல் போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!