News March 1, 2025
ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு தமிழில் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழிலேயே கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆளுநர் தமிழில் கடிதம் எழுதியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களுடைய தலைமையின் கீழ், தமிழ்நாட்டு மக்கள் நலம்பெற வேண்டும் என்று முதல்வரை ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.
Similar News
News March 1, 2025
பாஜக தேசியத் தலைவராகிறாரா வானதி?

பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் இம்மாதம் 15 அல்லது 16ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு பாஜக மூத்த பெண் தலைவர்கள் யாரேனும் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் அப்பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
News March 1, 2025
விஜய் கட்சி ஜெயிக்காது: அண்ணாமலை

2026இல் விஜய்யின் தவெக அபார வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை, பிரசாந்த் கிஷோர் வெற்றிபெறும் என சொன்ன கட்சி (தவெக) ஜெயிக்காது. அந்த கட்சிக்கு 3ஆம் இடமே கிடைக்கும் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஆணவத்துடன் குறுநில மன்னர்கள் போல திமுகவினர் செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே, அடுத்து பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றார்.
News March 1, 2025
போப் பிரான்சிஸுக்கு மூச்சுத் திணறல்: வாடிகன்

சுவாசத் தொற்று பாதிப்புக்காக ரோம் ஹாஸ்பிடலில் போப் பிரான்சிஸ் பிப். 14இல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 15 நாட்களாக தொடர்ந்து மருத்துவக்குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு இருப்பதாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாச நிலை திடீரென மோசமடைந்ததால் மூச்சுக்குழாய் ஆபரேசன் செய்யப்பட்டு இருப்பதாகவும் வாடிகன் நிர்வாகம் கூறியுள்ளது.