News October 8, 2025
கவர்னர் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார்: உதயநிதி

எல்லா கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் கவர்னரும் பரப்புரையை தொடங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகம் யாருடன் போராட போகிறது என கவர்னர் RN ரவி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகம் கவர்னருடன் போராடி கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து போராடி வெல்வோம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 8, 2025
இதெல்லாம் கண்களுக்கு தெரியும்.. ஆனா தெரியாது

அளவில் பெரியதாக இருந்தால் எளிதாக கண்களுக்கு தென்படும். ஆனால், அளவில் சிறியதாக இருப்பதை, பலராலும் அடையாளம் காண முடியாது. சிறியதாக இருப்பவை, தனித்துவமாகவும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலே, சிலவற்றை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களை ஆச்சரியப்பட வைத்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
கரூர் துயரம்.. கண்ணீர் சிந்திய விஜய்

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். குறிப்பாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துருவ் விக்னேஷின் அத்தையுடன் பேசியபோது, குழந்தை புகைப்படத்தை பார்த்துக் கண்ணீர் சிந்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் தாயார் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த அவர், மேலும் வேதனையடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
News October 8, 2025
விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவ ராஜ்குமார்

விஜய் தனது அரசியல் பயணத்தில் யோசித்து நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவ ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பேச்சு நன்றாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், கரூர் துயர் ஒரு நேரக்கூடாத நிகழ்வு என்றும், அதனால் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.