News February 22, 2025
ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: RN ரவி

ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலோசனைபடி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என ஆளுநர் RN ரவி உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் உள்ளதாகவும், மசோதாவை நிறுத்தி வைத்தாலே அந்த மசோதா செயலிழந்துவிட்டதாக அர்த்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 22, 2025
வீட்டிலேயே ஆண்-பெண் பாகுபாடு: நீதிபதி ஆதங்கம்

மகன்களை விட மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். பாலின சமத்துவம் வீட்டில் இருந்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், பாலின சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நெறிமுறைகளை பள்ளிப்பாடத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News February 22, 2025
IND vs PAK: மிஸ்ட்ரி ஸ்பின்னரை இறக்கும் ரோஹித்..

பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK மேட்ச் நாளை நடைபெறுகிறது. இதில், குல்தீப் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் முதல் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவருக்கு பதிலாக அணியில், வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படலாம் எனப்படுகிறது. அதே போல, ராணாவிற்கு ரெஸ்ட் கொடுத்து அர்ஷ்தீப்பை அணியில் சேர்க்கலாம் என்றும் தகவல் வெளிவருகின்றன. உங்களின் பெஸ்ட் பிளேயிங் XI எது?
News February 22, 2025
புதிதாக 60 கட்சிகள் உதயம்

2024 – 2025இல் நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகள், 58 மாநிலக் கட்சிகள் மற்றும் 2,763 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளது கவனிக்கத்தக்கது. புதிய கட்சிகள் உதயம் குறித்து உங்கள் கருத்து என்ன?