News January 6, 2025

ஆளுநர் மாநிலத்தை விட்டே வெளியேறலாம்: சீமான்

image

சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல், அவர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே வெளியேறலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம்; அவரவர் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அவசியம் எனக் கூறினார். மேலும், புத்தக காட்சியில் சர்ச்சைக்காகத்தான் பேசினேன். என் பேச்சு சர்ச்சையாகாவிட்டால் நான் பேசி என்ன பயன் என்று தெரிவித்தார்.

Similar News

News January 16, 2026

அதிமுக ஆபிஸில் தற்கொலை.. இபிஎஸ் அதிர்ச்சி

image

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பகுதி செயலாளர் சுகுமார் உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த சில நாள்களாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அவர், கட்சி அலுவலகத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றிய போலீசார், குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணங்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

மீண்டும் ரேஸில் முந்துகிறாரா சிவகார்த்திகேயன்?

image

பொங்கலை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வெளியானது. முதல் 2 நாள்கள் நல்ல வசூல் இருந்தாலும், பின்னர் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை தொடங்கியதும் கலெக்‌ஷன் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று பொங்கல் நாளில் ₹10 கோடி வசூலித்துள்ளதாகவும், விரைவில் ₹100 கோடி கிளப்பில் இணையும் என்றும் கூறப்படுகிறது.

News January 16, 2026

இவர்களுக்கும் பொங்கல் பரிசு.. ஹேப்பி நியூஸ்

image

TN-ல் பொங்கல் தொகுப்புடன் ₹3,000 ரொக்கமும் வழங்கப்பட்டது. பயனாளிகள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக 14-ம் தேதியும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. சிலர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றதால், இன்னும் பரிசை வாங்காமல் உள்ளனர். இதனால், இம்மாதம் இறுதி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!