News September 4, 2025
நக்சல் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது: அமித்ஷா

இந்தியாவில் நக்சல்களை ஒழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமித்ஷா, 2026, மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். மேலும் நக்சல் பயங்கரவாதிகள் சரணடையும் வரை (அ) கைதாகும் வரை (அ) ஒழிக்கப்படும் வரை PM மோடி தலைமையிலான அரசு ஓயாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
Similar News
News September 4, 2025
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு?

EPS பரப்புரையின்போது ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்குதலுக்கு உள்ளானது பேசுபொருளானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை HC-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த HC, ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்தது. அத்துடன், போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து தமிழக DGP பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News September 4, 2025
ராமதாஸ் விதித்த கெடு: இன்று பதிலளிக்கும் அன்புமணி

ராமதாஸ் தலைமையிலான பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனையடுத்து, இதற்கு பதிலளிக்க ஆக.31 வரை அவகாசம் அளித்து, அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் பதிலளிக்காத நிலையில், செப்.10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இன்று (செப்.4) பதிலளிப்பேன் என்று அன்புமணி கூறியுள்ளார். இது பாமக வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.
News September 4, 2025
விசிகவை திமுகவே விழுங்கிவிடும்: EPS

பட்டியலின மக்களை அவமதிக்கும் கட்சிதான் திமுக என EPS சாடியுள்ளார். மதுரை பரப்புரையில் பேசிய அவர், இந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள விசிகவின் கொடிக்கம்பங்களை நட விடாமல் திமுக அரசு தடுப்பதாக குற்றஞ்சாட்டினார். இதைக் கூறினால் நாங்கள் (அதிமுக) கூட்டணியை உடைப்பதாக பேசுகின்றனர் என்றார். மேலும், நாங்கள் கூட்டணியை உடைக்க மாட்டோம், திமுகவே மெல்ல மெல்ல விசிகவை விழுங்கிவிடும் என்று காட்டமாக தெரிவித்தார்.