News January 6, 2025
அரசு பயிற்சி டாக்டர் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசி மூலம் மருந்து செலுத்தி டாக்டர் சந்தான கோபாலன் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலுக்கும் தெரியவில்லை. அவரின் உடலை மீட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
உள்கட்சி அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் அளவிற்கு முக்கியத்துவம் வழங்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக பிரசார குழுவில் KAS-க்கு 3-ம் இடம் வழங்கப்பட்டிருப்பது, தனது தொகுதி மா.செ.விடம் பேச ஆனந்தின் அனுமதி பெறவேண்டிய நிலை, CBI விவகாரத்தில் கருத்தை கேட்காதது, தான் அழைத்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என பல விஷயங்களில் KAS அதிருப்தியில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
News January 20, 2026
டிரம்புக்கு பதிலடி கொடுத்த நார்வே PM

நோபல் பரிசு கிடைக்காததால் அமைதியை விரும்ப போவதில்லை; கிரீன்லாந்தை கைப்பற்றுவேன் என <<18896895>>டிரம்ப்<<>> கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நோபல் பரிசு தனியார் அமைப்பால் வழங்கப்படுவதாகவும், நார்வே அரசாங்கத்திற்கு அதில் பங்களிப்பு இல்லை என அந்நாட்டின் PM ஜோனஸ் கர் ஸ்டோர், டிரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க்குக்கு, நார்வே ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
அமைச்சர் KN நேருவுக்கு புதிய சிக்கல்!

அமைச்சர் <<18786820>>KN நேரு<<>> மீது ஏற்கனவே டெண்டர், வேலைநியமன ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக ₹1 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி ED, TN அரசு மற்றும் DGP-யிடம் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுமார் 340 அதிகாரிகளின் இடமாற்றத்தில், ₹365 கோடி வரை பணமோசடி நடந்துள்ளதாக ஆதாரங்களை இணைத்துள்ள ED, உடனே FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.


