News December 5, 2024
ஒரு டிக்கெட்டுக்கு ₹46 மானியம் தரும் அரசு

ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ₹56,993 கோடி மானியம் வழங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மானிய விலை டிக்கெட் இன்னும் ஏன் தொடங்கப்படவில்லை என துரை வைகோ MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதை குறிப்பிட்ட அவர், ஒரு ரயில் டிக்கெட் விலை ₹100 என்றால், பயணிகளிடம் ரயில்வே ₹54 மட்டுமே வசூலிக்கிறது என்றார்.
Similar News
News October 21, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. விஜய் போட்ட கண்டிஷன் இதுதான்

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க அதிமுக மட்டுமின்றி, டெல்லி மேலிடமும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியிலிருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் தவெகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் CM நாற்காலி தங்களுக்கே வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பின்னர், துணை முதல்வர், மத்திய வாரிய பதவிகள் உள்ளிட்டவைகளை வழங்க முன்வந்ததாம். ஆனாலும், அதை விஜய் தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
News October 21, 2025
பால் டீக்கு பதில் இதை ட்ரை பண்ணுங்களேன்

காலையில் எழுந்ததும் டீ குடிப்பது, நம்முடைய மரபாகவே மாறிவிட்டது. பால் டீயை வெறும் வயிற்றில் குடிப்பதால் அசிடிட்டி, இதயத்துடிப்பு அதிகரிப்பு, செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். காலை எழுந்ததும் டீ குடிக்காமல் இருக்க முடியாது என்று கூறுபவர்களும் உண்டு. உங்களுக்காகவே பால் டீக்கு பதிலாக ஹெல்தியான டீ வகைகளை மேலே கொடுத்துள்ளோம். swipe செய்து பார்த்துவிட்டு ஷேர் பண்ணுங்க.
News October 21, 2025
நெதன்யாகுவை நிச்சயம் கைது செய்வேன்: கனடா PM

போர் குற்றங்கள், போரில் பல உயிர்களை கொன்றதற்காக இஸ்ரேல் PM நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், அவரை நிச்சயம் கைது செய்வேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாரண்ட் உத்தரவை கனடா பின்பற்றும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.