News December 5, 2024
ஒரு டிக்கெட்டுக்கு ₹46 மானியம் தரும் அரசு

ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ₹56,993 கோடி மானியம் வழங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மானிய விலை டிக்கெட் இன்னும் ஏன் தொடங்கப்படவில்லை என துரை வைகோ MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதை குறிப்பிட்ட அவர், ஒரு ரயில் டிக்கெட் விலை ₹100 என்றால், பயணிகளிடம் ரயில்வே ₹54 மட்டுமே வசூலிக்கிறது என்றார்.
Similar News
News November 17, 2025
ஐயப்ப பக்தர்களுக்கு ₹500-ல் ஆன்மிக சுற்றுலா

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஆரியங்காவு, அச்சன்கோயில், பந்தளம், குளத்துப்புழை, குருவாயூர் உள்ளிட்ட 72 ஆன்மிக தலங்களை இணைக்கும் படியான சுற்றுலா திட்டத்தை KSRTC அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபருக்கு ₹500 – ₹700 வரை மட்டுமே டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பத்தனம்திட்டா, பம்பை பஸ் ஸ்டாண்ட்களில் பெறலாம்.
News November 17, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

வாரத்தின் முதல் நாளான இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹92,320-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹11,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை மொத்தம் ₹2,880 குறைந்துள்ளது.
News November 17, 2025
குண்டுவெடிப்பில் இதை இன்னும் கண்டுபிடிக்க முடியல!

டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமரின் போனை இன்னும் டிரேஸ் செய்யமுடியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன் அவர் போனில் பேசியது தெரியவந்திருக்கிறது. அவர் பயன்படுத்திய 2 செல்போன்கள் கிடைத்தால், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது யார், எங்கிருந்து நிதி வந்தது என பல தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


