News February 24, 2025

10 மாவட்டங்களில் சிறுமிகளை பாதுகாக்க அரசு அசத்தல்

image

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையின் கீழ், குழந்தைகளின் உளவியல், மனநலம், கல்வி உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த குமரி, கடலூர், கோவை, ஈரோடு, தேனி, வேலூர், தி.மலை உள்பட 10 மாவட்டங்களில் மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவர். இதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறைக்கு <>இதில் <<>> பார்க்கவும்.

Similar News

News February 25, 2025

மனைவியை விவாகரத்து செய்த மாதம்பட்டி ரங்கராஜ்

image

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ருதி என்பவரை திருமணம் செய்த அவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சினிமா ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிரிஸில்டா என்பவரை அவர் தற்போது காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. மெகந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த அவர், கேட்டரிங் தொழிலும் செய்து வருகிறார்.

News February 25, 2025

பாலியல் வழக்கு: தேடப்பட்டு வந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

image

தூத்துக்குடியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கத்தியை காட்டி வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, தலைமறைவான மாரிச்செல்வம் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டு துளைத்த நிலையில், அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 25, 2025

நல்ல மதிப்பெண் பெற்ற 400 பேருக்கு அரசு வேலை மறுப்பு!

image

அரசு மருத்துவர் பணிக்கு தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்ற 400 மருத்துவர்கள் தகுதியில்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் பணிக்கு 2024க்கு முன்பு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இதனால், தாமதமாக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததாக, தேர்வில் வெற்றி பெற்ற 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!