News August 19, 2024
அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு, விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செஞ்சியில் பேட்டியளித்த அவர், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஹைடெக் லேப் மற்றும் இரவு நேரக் காவலர்கள், தூய்மை பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கழிப்பறைகள் கட்டி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2026
போர் நெருக்கடி.. CM-களுடன் நாளை மோடி ஆலோசனை

அனைத்து மாநில CM-களுடன் PM மோடி நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி வழியாக நடக்கும் இக்கூட்டத்தில் மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும். நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநில CM-கள் இதில் பங்கேற்க மாட்டார்கள். பதிலாக அம்மாநில தலைமை செயலர்களுக்கு தனியே கூட்டம் நடத்தப்படும்.
News March 26, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹3000.. ராமதாஸ் வாக்குறுதி

2026 தேர்தலுக்கான அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். *அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (குடும்ப தலைவிகளுக்கு) ₹3000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். *மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் *சிறு, குறு, நடுத்தர தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு 50% மானியத்துடன் கடன் வழங்கப்படும் *மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
திமுக கூட்டணியில் சிரித்து கொண்டே அழுகிறோம்: மதிமுக

தனிச்சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என சிரித்துக்கொண்டே அழுவதாக மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த அவர், மதிமுகவின் தகுதிக்கு தகுந்தாற்போல தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார். மேலும், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து மாலைக்குள் தெரிந்துவிடும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


