News September 10, 2025
பலிகடாவாகும் அரசுப் பள்ளிகள்: அண்ணாமலை

திருச்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, அங்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தப்பட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப் பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவதாக கூறி வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News September 10, 2025
விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

விஜய்யின் பிரசார பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தால், அது ஏற்புடையதல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து, செயல் சுதந்திரம் உள்ளதாகவும், அந்த வகையில் விஜய்க்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த காரணத்துக்காக அவரின் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது (அ) காலம் தாழ்த்தப்பட்டது என்பதை தான் இன்னும் அறியவில்லை என்றும் அவர் கூறினார்.
News September 10, 2025
பைக்குகளின் விலை கணிசமாக குறைந்தது.. HAPPY NEWS

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு எதிரொலியாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் <<17669084>>ராயல் என்ஃபீல்ட்<<>> நிறுவனமும் 350CC பைக் மாடல்களின் விலையை குறைத்தது. இந்நிலையில், யமஹா, ஹீரோ நிறுவனங்களும் தங்களது பைக் மாடல்களின் விலையை குறைத்துள்ளன. எந்தெந்த பைக்குகளின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 10, 2025
8 பேட்ஸ்மென்களுடன் களமிறங்கும் இந்தியா

UAE-க்கு எதிரான முதல் ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங் அணியை இந்தியா தேர்வு செய்துள்ளது. அதன்படி, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இது சற்றே எதிர்பார்த்த அணிதான் என்றாலும் , சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.