News January 2, 2025
அரசு பள்ளிகள் தத்தெடுப்பு? விளக்கம்

மாநிலம் முழுவதும் 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று அன்பில் மகேஷ் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் சிஎஸ்ஆர் மூலம் பங்களிப்பார்கள், உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டது. அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் நோக்கமில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News November 27, 2025
இவர்தான் #Thalaivar173 டைரக்டரா?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி, வெளியேறிவிட்ட நிலையில், அந்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி, கதிர் ஆகியோரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
News November 27, 2025
அதி கனமழை… மக்களே வெளியே வராதீங்க

வங்கக்கடலில் சற்றுநேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
News November 27, 2025
உதயநிதிக்கு CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்

கொள்கைப் பற்றோடு உழைப்பால் உயரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். DCM பற்றி கட்சியினர் பாராட்டுவதாக கூறிய அவர், அதை கேட்கும்போது தந்தையாக மட்டுமல்லாமல் தலைவனாகவும் மகிழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும், காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழ வேண்டும் என DCM-க்கு அட்வைஸ் செய்துள்ளார்.


