News September 29, 2025
தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கொடுக்கும் அரசு திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது ஸ்த்ரி சக்தி யோஜனா திட்டம். இதில் ₹5 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். பெண்கள் மட்டுமே நடத்தும் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் பெண்கள் SBI வங்கியை அணுகவும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News September 29, 2025
BREAKING: தவெக தலைவர்களை கைது செய்ய புறப்பட்டனர்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர்கள் N.ஆனந்த், CTR நிர்மல்குமார், மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தலைமறைவாக உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், N.ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை, புதுச்சேரிக்கு போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 29, 2025
Sports Roundup: ஹாக்கியில் இந்தியா அசத்தல் வெற்றி

*ஏடிபி 500 டோக்கியோ ஓபனில் ரோகன் போபண்ணா – டகேரு யுசூகி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *ஜூனியர் ஹாக்கியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. *ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், 4*100மீ மெட்லே ரிலே பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. *புரோ கபடி லீக்கில் இன்று யுபி யோத்தாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்.
News September 29, 2025
கரூர் துயரம்: NDA சார்பில் உண்மை கண்டறியும் குழு

கரூர் துயர சம்பவம் தொடர்பாக NDA கூட்டணி சார்பில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து JP நட்டா அறிவித்துள்ளார். MP ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில் இதில், Ex அமைச்சரும், MP-யுமான அனுராக் தாகூர், கர்நாடக MP தேஜஸ்வி சூர்யா, Ex DGP-யும், MP-யுமான பிரிஜ்லால், ஆந்திர MP புட்ட மகேஸ் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளது.