News October 2, 2025
பெண்களுக்கு ₹50,000 தரும் அரசு திட்டம்

உணவு சார்ந்த தொழில்களை தொடங்க விரும்பும் பெண்களுக்கு அன்னபூர்ணா திட்டம் மூலம் கடன் வழங்குகிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் பிசினஸுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள் வாங்க ₹50,000 வரை கடன் பெறலாம். கடனை அடைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அருகில் இருக்கும் SBI வங்கிக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உங்க வீட்டு பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News October 2, 2025
சற்றுமுன்: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

காலையில் மகிழ்ச்சியை கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை, மாலையில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் சவரனுக்கு ₹560 குறைந்த நிலையில், மாலையில் ₹560 அதிகரித்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹10,950-க்கும் ஒரு சவரன் ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் சவரன் ₹30,000 வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 2, 2025
பூரி உப்பி வருவதற்கு இதை பண்ணுங்க

பூரி சுடும் போது பலருக்கும் அது உப்பி வரவில்லை என்ற கவலை ஏற்படும். இதற்கு நீங்கள் மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேருங்கள், எண்ணெய் நன்கு சூடான பிறகே கடாயில் பூரி மாவை போட வேண்டும். மேலும், பூரி அதிக எண்ணெய் பிடிக்காமல் இருக்க மாவை இறுக்கமாக பிசையாதீர்கள். அதே போல எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால், பூரியில் அதிக எண்ணெய் பிடிக்காது. இதை உங்களுடைய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News October 2, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. சிறப்பு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்பதிவு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில் ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் திறக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.