News September 22, 2025
₹6000 உதவித்தொகை வழங்கும் அரசு திட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க <
Similar News
News September 22, 2025
பொருள்கள் விலை குறையுமா? அளவு கூடுமா?

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை குறையும். அதிக விலை அல்லது பெரிய பொருள்கள் விஷயத்தில் குழப்பமில்லை. ஆனால், சிறிய பொருள்களில் (உ-ம்: ₹5 பிஸ்கட், ₹10 சோப்பு) விலை குறைக்கப்படுமா? அல்லது விலைக் குறைப்பு செய்யப்படாமல் அளவு அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அளவு தான் கூட்டப்படும் எனக் கூறப்பட்டாலும், நிறுவனங்கள் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
News September 22, 2025
எந்த blood group-க்கு எந்த நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்?

மருத்துவ புள்ளிவிவர ஆய்வின் படி: *AB ரத்தம் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பிரச்னைகள் வரலாம் *A, B இரண்டு குரூப்புக்கும் டைப்-2 நீரிழிவு வாய்ப்பு அதிகம். *A மன அழுத்தம், வயிறு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *A, AB, B மாரடைப்பு, இதயநோய், கணைய கேன்சர் வாய்ப்பு அதிகம். * O நீண்ட ஆயுள் வாய்ப்பு அதிகம் என்பதுடன், மற்ற குரூப்களை விட இவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
News September 22, 2025
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்… 30 பேர் உயிரிழப்பு

பாக்.,ன் கைபர் பக்துன்க்வா பகுதியில் அந்நாட்டு விமானப்படை குண்டு மழை பொழிந்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் 8 வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடத்திய தாக்குதலில், பொதுமக்களே பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சொந்த நாட்டு மக்களை ராணுவமே கொன்ற விவகாரம் விவாதமாகியுள்ளது.