News October 6, 2025
வள்ளலார் சர்வதேச மாநாடு நடத்த அரசு திட்டம்

சென்னையில் விரைவில் வள்ளலார் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மாநாட்டில் வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 24 சன்மார்க்கிகளை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வள்ளலார் குறித்து நூல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 6, 2025
BREAKING: பள்ளி திறந்த முதல்நாளே முக்கிய அறிவிப்பு

<<17901745>>RTE<<>> சட்டத்தின்கீழ் பயன்பெற பள்ளி மாணவர்கள் இன்று(அக்.6) முதல் விண்ணப்பிக்கலாம் என TN அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய அறிவிப்பின்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்றும், பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. RTE நிதியை விடுவிக்க மத்திய அரசு தாமதம் செய்த நிலையில், பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SHARE IT
News October 6, 2025
BREAKING: மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேரி இ.பிரன்கோவ் (அமெரிக்கா), பிரெட் ரம்ஸ்டெல் (அமெரிக்கா) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (ஜப்பான்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 7 நாள்களில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட உள்ளது.
News October 6, 2025
காந்தாரா 1 மூச்சடைக்க வைத்தது: அண்ணாமலை

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஒவ்வொரு காட்சியும் தன்னை மூச்சடைக்க வைத்ததாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இது ஒரு உலக தரமான படைப்பு என பாராட்டிய அவர், துளு நாட்டின் கலாச்சாரம், பஞ்சுர்லி, குலிகா தெய்வ வழிபாடு போன்றவற்றை கொடுத்த ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும், இயக்கத்தையும் வெகுவாக பாராட்டினார். IPS-ஆக பணிபுரிந்த போது, தான் நேரில் பார்த்த மரபுகளை எண்ணி பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.