News April 16, 2025

அரசாணை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்: TN அரசு

image

தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதே போல், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

‘க்யூட்’ கீர்த்தியின் கூல் போட்டோஸ்

image

‘க்யூட்’ ரியாக்‌ஷன் கொடுப்பதில் கில்லாடியான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்திருந்த படம் ‘ரிவால்வர் ரீட்டா’. அப்படத்தின் சூட்டிங்கின் போது எக்கச்சக்கமான போட்டோஸ் எடுத்திருப்பார் போல. தொடர்ச்சியாக அவற்றை SM-ல் பகிர்ந்து வருகிறார். அதற்கு ❤️❤️ விடும் ரசிகர்கள், க்யூட் கீர்த்தி தற்போது கிளாஸி கீர்த்தியாக மாறிவிட்டதாக கமெண்ட் செய்கின்றனர். கிளாஸி கீர்த்தியின் போட்டோக்களை SWIPE செய்து பாருங்க..

News December 7, 2025

2050-ல் குடிக்க சுத்தமான நீர் கூட கிடைக்காது!

image

2050-ல் உலகம் முழுவதும் 22 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என சர்வதேச ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. வியன்னாவின் MCH, உலக வங்கி இணைந்து ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் நகர்ப்புறமாக்கல் தொடர்ந்தால் 19 கோடி பேர் கழிவுநீர் வெளியேற்ற வசதி இல்லாமல் அவதிப்படுவார்கள், நீருக்காக அதிக விலை கொடுக்க வேண்டியது வரும் என்றும் தெரியவந்துள்ளது.

News December 7, 2025

11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும்

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) TN-ல் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் கவனமாக பயணிக்கவும் மக்களே. உங்கள் ஊரில் மழை கொட்டுகிறதா?

error: Content is protected !!