News April 12, 2025
அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

வருகிற 14ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு ஆகும். இது அரசு விடுமுறை தினமாகும். இதனால் வருகிற 14ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை. தற்போது நடைபெற்றுவரும் பொதுத் தேர்வுகளும் திங்கட்கிழமை நடக்காது.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: பெண் விபரீத முடிவால் மரணம்!

ஆம்பூர் பர்ணக்கார பகுதியை சேர்ந்த தன்வீரி மனைவி ஆசியா பர்வீன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆசியா பர்வீன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
₹8,119 கோடிக்கு கோயில் நிலங்கள் மீட்பு: சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், ₹8,119 கோடி மதிப்பிலான 8,000 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ₹1,557 கோடிக்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளதாகவும், அதன் மூலம் 12,000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
News December 1, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஒரு கிராம் ₹12 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,070-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹96,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.


