News April 8, 2025
பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
மழைக்கு மரியாதை கொடுங்க தம்பி: சீமான்

தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, கடலம்மா மாநாட்டை நெல்லையில் சீமான் நடத்தினார். இதில் அவர் பேசிக்கொண்டிருந்த போது, மழை பெய்ய தொடங்கியதால், தொண்டர்கள் மழையில் நனையாமல் இருக்க சேர்களை தூக்கிப்பிடித்தனர். இதை கவனித்த சீமான், மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா என கூறி, சேரினை இறக்க அறிவுறுத்தினார். கடலம்மாவை பேசும் போது மழை வரவில்லை என்றால், பிறகு கடலுக்கு என்ன மரியாதை என்றும் கூறினார்.
News November 22, 2025
காந்த கண்ணழகி கீர்த்தி சுரேஷ்

விஜய் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படம் மூலம் புதிய உயரத்தை தொட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக உள்ள கீர்த்தியின் ‘ரிவால்வர் ரிட்டா’ படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் புரோமோஷனோடு சேர்த்து அவர் போட்ட புதிய போட்டோக்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்திழுக்கிறது.
News November 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது. *அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு. *ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிப்புக்கான திறவுகோலாகும். *ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் தொடங்குகிறது.


