News October 9, 2025
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை: தேஜஸ்வி

பிஹாரில் அரசு வேலையில் இல்லாத குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி கொடுத்துள்ளார். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாள்களில் அரசு வேலை வழங்கப்படும் எனவும், 20 மாதங்களில் அரசு வேலை செய்யாத குடும்பங்கள் பிஹாரில் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பிஹாரில் வரும் நவ.6-ம் தேதி சட்டசபை தேர்தல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 9, 2025
பிரிட்டனிடம் ₹4,156 கோடிக்கு ஆயுதம் வாங்கும் இந்தியா

UK பிரதமர் கியர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையே வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக ₹4,156 கோடிக்கு இலகுரக ஏவுகணைகளை இந்தியா இறக்குமதி செய்யும். இதனால் அயர்லாந்தில் உள்ள ஏவுகணை தொழிற்சாலையில் 700 பேருக்கு வேலை உறுதியாகுமாம். இந்நிலையில், மேக்-இன் இந்தியா என்று சொல்லிவிட்டு இலகு ரக ஆயுதங்களை கூட பிரிட்டனிடம் வாங்குவது ஏன் என SM-ல் பலர் கமெண்ட் செய்கின்றனர்.
News October 9, 2025
சுதந்திரமாக கொலை செய்கிறார்கள்: EPS

தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக கொலை செய்து வருவதாக EPS சாடியுள்ளார். போலீஸை கண்டு குற்றவாளிகளுக்கு பயமில்லை எனவும், நெல்லை காங்., மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தற்போதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேபோல், தலைவர்களின் பிறந்தநாள் கூட்டத்திற்கு கூட அரசு அனுமதி அளிப்பதில்லை, கோர்ட் சென்றே அனுமதி பெற வேண்டியிருப்பதாக EPS தெரிவித்தார்.
News October 9, 2025
சற்றுநேரத்தில் தொடங்குகிறது ‘கர்வா செளத்’

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் கர்வா செளத் பண்டிகை, தற்போது தென் மாநிலங்களிலும் பிரபலமாகி வருகிறது. முழுநிலவு கழிந்த 4-ம் நாள் (இன்றிரவு 10:54 PM தொடங்கி நாளை 07:38 PM-க்கு முடிவடையும்) இது கொண்டாடப்படுகிறது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி, காலை முதல் மாலைவரை விரதம் இருந்து மனைவியர் நோன்பு இருப்பர். பின், நிலவையும் கணவரையும் சல்லடை மூலம் பார்த்த பின் தண்ணீர் குடித்து நோன்பை முடிக்கின்றனர்.