News September 2, 2025
UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

UPSC தேர்வு எழுதி, இறுதிக் கட்டம்வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பர். SHARE.
Similar News
News September 2, 2025
நடிகை ரன்யா ராவிற்கு ₹102 கோடி அபராதம்

தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவிற்கு ₹102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து 14.8 கி.கி., தங்கம் கடத்தி வந்த போது, பெங்களூரு ஏர்போர்ட்டில் வைத்து கடந்த மார்ச் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேற்கூறிய அபராதத்தை செலுத்த தவறினால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரன்யா தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் நடித்தவர்.
News September 2, 2025
பிரபல நடிகர் காலமானார்.. தமிழ் திரையுலகில் சோகம்

மதன்பாப், கோட்டா சீனிவாச ராவ், சரோஜா தேவி என நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்ததால் திரையுலகம் சோகத்தில் இருக்கிறது. இந்நிலையில், 80களில் பிரபலமான <<17594155>>நடிகர் குரியகோஸ் காலமானார்<<>>. பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அவள் சுமங்கலிதான்’ படத்தில் நடித்த குரியகோஸ் பாத்திரம் அவரை மிக ஈர்த்ததால், தனது ரங்கா என்ற பெயருடன் அதனை இணைத்துக் கொண்டார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News September 2, 2025
ஜியோ, ஏர்டெல் சேவை முடங்கியது

ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க்குகளில் சிக்னல் பிரச்னை இருப்பதால் நேற்று முதலே சிரமத்தை சந்திப்பதாக பயனர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 5ஜி நெட்வொர்க்குகள் சாதாரண வேகத்திலேயே செயல்படுவதாகவும், டவுன்லோடுகள் மெதுவாக இருப்பதாகவும் பயனர்கள் புலம்புகின்றனர். பிரச்னைகளை கண்டறிந்து சரிசெய்து வருவதாக ஜியோவும் சோஷியல் மீடியாவில் பயனர்களுக்கு பதிலளித்து வருகிறது. உங்களுக்கு சிக்னல் பிரச்னை இருக்கா?