News February 1, 2025

கும்பமேளா உயிரிழப்புகளை மறைக்கும் அரசு: அகிலேஷ்

image

இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உ.பி. அரசு மறைப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப அரசு முயன்று வருவதாகவும், அரசின் நிர்வாகத் தோல்வியே கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். யோகி ஆதித்யநாத் ஒரு பொய்யர் என சாதுக்களே விமர்சித்து வருவதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News April 10, 2026

BREAKING: விஜய்க்கு ரஜினி ஆதரவு

image

ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News April 10, 2026

உண்மையான நட்பு எங்கே?

image

நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகமாட்டாங்க. `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உள்ளுக்குள் அந்த உணர்வு இருக்கணும். ஆனால், இதெல்லாம் இந்த காலத்தில் கஷ்டம் தான். நுகர்வு கலாசாரம், அதுக்காக பணத்தை தேடி ஓடும் நிலையும், நவீன டெக்னாலஜியும் மனுஷங்கள நெருங்கிப் பழகவிடாம தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்கா, பொழுதை போக்கும் நட்பா தான் இருக்கும். நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?

News April 10, 2026

இரவில் தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

image

போர் பதற்றத்துக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை காலை உயர்ந்த நிலையில் மாலை கிடுகிடுவென குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் தங்கம் $25 குறைந்து $4,768-க்கு வர்த்தகமாகிறது. அதேபோல், வெள்ளியும் $0.20 குறைந்து $76-க்கு விற்பனையாகிறது. நம்மூரில் இன்று சவரனுக்கு ₹1000 உயர்ந்த நிலையில், நாளை குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!