News April 28, 2025
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன்: CM

சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை வாரி இறைத்துள்ளார் CM ஸ்டாலின். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகும் என்றும் 01.10.2025 முதல் 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பயன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 1, 2025
பள்ளிகள் விடுமுறை… வந்தது அப்டேட்

பள்ளி மாணவர்களுக்கு கொத்தாக விடுமுறையுடன் டிசம்பர் மாதம் பிறந்திருக்கிறது. அரையாண்டு விடுமுறை டிச.24-ல் தொடங்குவதால், இம்மாதத்தில் தொடர்ந்து 8 நாள்கள் லீவு தான். வார விடுமுறையுடன் சேர்த்து இம்மாதம் மட்டும் 14 நாள்கள் பள்ளிகள் செயல்படாது. அதுமட்டுமின்றி, மழை காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 1, 2025
தெளிவான முடிவை எடுத்துள்ளேன்: KAS

பாஜக சொல்லியே தவெகவில் இணைந்திருப்பதாக <<18435219>>உதயநிதி விமர்சித்ததற்கு<<>> செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். யார் சொல்லியும் இணையவில்லை, நானே தெளிவாக முடிவெடித்து தவெகவில் இணைந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், தனது பயணங்கள் சரியாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதாகவும் அவர் சாடியுள்ளார்.
News December 1, 2025
அரையாண்டு தேர்வுக்கு தயாராகும் பள்ளிகள்

1 முதல் 5-ம் வகுப்பு வரையான அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை டிச.3-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் எமிஸ் தளத்தில் டவுன்லோடு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் பயன்படுத்த HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


