News March 5, 2025

இந்த தகுதி இருந்தால் தான் அரசு ஓட்டுநர் பணி

image

ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் & பரிசோதகர் (DICI) பணியிடங்களை அமல்படுத்தும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர் நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10th முடித்திருக்க வேண்டும் என்ற விதிகளில் திருத்தம் செய்து கனரக ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் மற்றும் முதலுதவி பயிற்சி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2025

இரண்டே இந்தியர்கள் படைத்த சாதனை.. அதிலும் கோலி!

image

ODI சேஸிங்கில் 8,000 ரன்களை கடந்த 2ஆவது வீரராக கோலி உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கோலி இணைந்துள்ளார். 242 சேஸிங் போட்டிகளில், சச்சின் 8720 ரன்களை எடுத்திருக்கிறார். ஆனால், கோலியோ வெறும் 170 போட்டிகளிலேயே 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். AUSக்கு எதிரான நேற்றைய போட்டியில், 84 ரன்களை அடித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

News March 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 197 ▶குறள்: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. ▶பொருள்: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

News March 5, 2025

டிரம்புக்கே டஃப் கொடுக்கும் ட்ரூடோ!

image

$30 பில்லியன் மதிப்பிலான USA இறக்குமதி பொருள்களுக்கு, கனடா பிரதமர் ட்ரூடோ 25% வரி விதித்துள்ளார். கனடாவின் இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும், டிரம்பின் நியாயமற்ற செயல் தொடர்ந்தால், கூடுதலாக 125 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, கனடா, மெக்ஸிகோ இறக்குமதிகளுக்கு டிரம்ப் 25% வரி விதித்திருந்தார்.

error: Content is protected !!