News May 3, 2024
7030 புதிய பேருந்துகள் வாங்க அரசு முடிவு

இந்த ஆண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் மட்டும் 15 ஆண்டுகள் நிறைவடைந்த 652 பேருந்துகள் கழிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பேருந்தின் கதவு, படிக்கட்டுகள் கழன்று விபத்து நேர்ந்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
Similar News
News January 30, 2026
டெல்லியின் அடிமையா திமுக? வைகோ பதில்

டெல்லிக்கு அதிமுக அடிமை இல்லை, திமுகதான் அடிமை என EPS வைத்த குற்றச்சாட்டுக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திமுக – காங்கிரஸை, பாஜக – அதிமுகவுடன் ஒப்பிட முடியாது எனவும், பாஜக எவ்வளவு அவமானப்படுத்தியும் அதை அதிமுக தாக்கிக்கொண்டதாவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில்தான் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News January 30, 2026
EPS காலில் விழுகிறாரே, அதை என்னனு சொல்வது? ப.சிதம்பரம்

முன்னதாக ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பை விமர்சித்த EPS, காங்கிரஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு திமுக வந்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம், இருவரும் சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது என அவர் கேட்டுள்ளார். மேலும், ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து இரு தலைமைகளும் பேசி முடிவு செய்யவே இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

தேமுதிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது என பிரேமலதா உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் நாள்கள் உள்ளதால் சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து, அதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EPS நேற்று கூறியிருந்தார்.


