News April 9, 2024
அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி

திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம் அருகே பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
சீமானுக்கு சவாலாக மாறும் தேர்போகி பாண்டி

காரைக்குடியில் சீமானுக்கு எதிராக அமமுகவின் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். 2021-ல் காரைக்குடியில் அமமுக சார்பில் தனித்து போட்டியிட்ட தேர்போகி பாண்டி 44,864 வாக்குகளை பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் சா.மாங்குடி 75,954, அதிமுக கூட்டணி வேட்பாளர் எச்.ராஜா 54,365 வாங்கினர். தற்போது அதிமுக – அமமுக கூட்டணி அமைத்துள்ளதால், அத்தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல் வெளியானது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தே வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $110 (இந்திய மதிப்பில் ₹10,435) உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவிலும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அடுத்த வாரமும் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே நீடிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்ப்பின் போர் நிறுத்த நீட்டிப்பும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
News March 28, 2026
காங்., நிர்வாகிகளின் முட்டாள் தனம்: பிரவீன் சக்ரவர்த்தி

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என ஜோதிமணி குற்றம்சாட்டியதற்கு பிரவீன் சக்ரவர்த்தி பதில் கொடுத்துள்ளார். X-ல் புகைப்படம் மூலம் ரிப்ளை செய்த அவர், TN காங்கிரஸ் தலைவர்களுக்குள் இருக்கும் தற்போதை மனநிலை முட்டாள் தனம் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொகுதிகளை சரிசமமாக பிரித்துகொள்வதே புத்திசாலித்தனம் எனவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


