News October 10, 2025

தீபாவளி போனஸ் ₹7,000 அறிவித்தது அரசு

image

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ₹7,000 போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி, சி பிரிவு ஊழியர்களுக்கு இந்த தொகை கிடைக்கும். புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹570 மதிப்புள்ள <<17874659>>தீபாவளி தொகுப்பு<<>> வழங்கப்படும் என CM ரங்கசாமி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 10, 2025

தமிழ் நடிகையை செருப்பால் அடித்த கொடுமை

image

கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தில் வீடு புகுந்து தாக்கிய ஜேம்ஸ் என்பவர் கைதாகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன், மீனாட்சியின் தாய், ஜேம்ஸை செருப்பால் அடித்ததாக தெரிகிறது. அதற்கு பழிதீர்க்க சென்ற அவர் தாய், மகள் இருவரையும் செருப்பால் அடித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது

News October 10, 2025

தீபாவளி போனஸுக்கும் வரி உண்டு

image

தீபாவளியில் புத்தாடை, பட்டாசு தவறாமல் இடம்பெறுவது போல், போனஸ், பரிசுகளுக்கும் ஊழியர்களின் மனதில் நிச்சயம் இடம் உண்டு. அப்படி ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி பரிசோ (அ) போனஸ் தொகையோ ₹5,000-க்கு மேல் இருந்தால் நிச்சயம் வரி செலுத்த வேண்டும். அத்துடன், இதனை ITR-லும் காண்பிக்க வேண்டும். தீபாவளி பரிசில் ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பேக்கேஜ், புத்தாடை, நகை, வாட்ச், ரொக்கம் ஆகியவையும் அடங்கும்.

News October 10, 2025

டாப் 10 வாட்ச் பிராண்டுகள்

image

விலை உயர்ந்த வாட்ச்சுகள், கலைநயம் கொண்ட தனித்துவமான வடிவமைப்பின் மூலம் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. நீங்களும் விலை உயர்ந்த வாட்ச்சுகளை தேடுகிறீர்களா? டாப் 10 இடங்களில் உள்ள விலை உயர்ந்த வாட்ச் பிராண்டுகள் மற்றும் அதன் சந்தை மதிப்பை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. எந்த வாட்ச் பிராண்டு டாப்பில் இருக்கு தெரியுமா? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!