News May 11, 2024

செரிமானப் பிரச்னைகளை தீர்க்கும் நெல்லிக்காய்

image

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தருவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காய் வைட்டமின் சி இன் அதிசிறந்த ஆதாரமாக உள்ளதால், வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

Similar News

News September 22, 2025

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த போர்ச்சுகல்

image

இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி <<17787971>>UK, ஆஸ்திரேலியா, கனடா<<>> நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதற்கு கடும் கண்டனங்களை இஸ்ரேல் தெரிவிக்க, மறுபுறம் பாலஸ்தீன அரசு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. இந்நிலையில் போர்ச்சுகலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரான்ஸும் முறைப்படி பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 466
▶குறள்: செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
▶பொருள்: செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

News September 22, 2025

Sports Roundup: ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு தங்கம்

image

*உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், 42 கிமீ மாரத்தானில் இந்தியாவின் ஆனந்த் வேல்குமார் தங்கம் வென்றார். *சீனா பேட்மிண்டனில் (பாரா) இந்தியாவின் சுமதி சிவன், சீன வீராங்கனை வீழ்த்தி தங்கம் வென்றார். *உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம். * அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

error: Content is protected !!