News September 27, 2025
Google-க்கு இன்று 27-வது பர்த்டே!

1998-ம் ஆண்டு US-ல் ஒரு Garage-ல் தொடங்கப்பட்டு, இன்று உலகின் அட்ரஸாக மாறியிருக்கும் Google-க்கு இன்று 27-வது பர்த்டே. ‘என்ன வேணும் உனக்கு.. கொட்டி கொட்டி கெடக்கு’ என Google-ளிடம் பதில் இல்லாத விஷயமே கிடையாது. ஆபிஸ் வேலையில் இருந்து, ட்ரிப் போறது, Girlfriend-க்கு கிப்ட் வாங்கி கொடுப்பது என எந்த ஒரு குழப்பத்திற்கும் ஈசியான விடையை Google-ல் கண்டுபிடிக்கலாம். நீங்க Google-ல் அதிகமாக என்ன தேடுவீங்க?
Similar News
News January 8, 2026
ஆஷஸ்: ஆஸ்திரேலியா வெற்றிக்கு 160 ரன்கள் இலக்கு

கடைசி ஆஷஸ் தொடரின் 2-வது இன்னிங்சில் 342 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பெத்தலை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், வெப்ஸ்டர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இன்று கடைசி நாள் என்பதால் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.
News January 8, 2026
BREAKING: நள்ளிரவில் சந்திப்பு.. கூட்டணியில் திடீர் மாற்றமா?

டெல்லி சென்ற EPS நேற்று இரவு 10 மணிக்கு அமித்ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் OPS, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியை 10 நாட்களுக்குள் இறுதி செய்யவும் அவர் EPS-யிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் வரும் நாள்களில் அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றம் நிகழலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News January 8, 2026
FLASH: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று(ஜன.8) குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $24.98 குறைந்து $4,460-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் $2.23 குறைந்து $78.73-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக இன்று இந்திய சந்தையிலும் தங்கம் விலை(₹1,02,400) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைந்தது.


