News March 27, 2025
வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சுந்தர் ஆதரவு!

குஜராத் அணியின் ஆல்ரவுண்டரும், TN வீரருமான வாஷிங்டன் சுந்தருக்கு, கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த IPL போட்டியில், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் ஒரு ரசிகர் X பக்கத்தில் இதுபற்றி விமர்சிக்க, பதிலுக்கு சுந்தர் பிச்சை ‘‘எனக்கும் கூட வியப்பாகவே இருந்தது’’ என கமெண்ட் செய்திருக்கிறார்.
Similar News
News March 30, 2025
களமிறங்கிய கே.எல்.ராகுல்.. ஆட்டம் களைகட்ட போகுது…

கே.எல். ராகுலுக்கு பெண் குழந்தை பிறந்ததால் கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது அணியில் இணைந்துள்ள அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கிறார். கடந்த போட்டியில் விளையாடிய சமீர் ரிஷ்விக்கு பதில் ராகுல் விளையாட உள்ளார். SRH-ஐ பொறுத்தவரை சிமர்ஜீத் சிங்க்கு பதில் ஜீஷான் அன்சாரி இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
News March 30, 2025
66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்

ஜெர்மனியில் 66 வயது பெண், 10ஆவது குழந்தை பெற்றுள்ளார். பெர்லினைச் சேர்ந்த அலெக்சாண்ட்ராக்கு, அறுவை சிகிச்சையின்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல் எடை ஏழேகால் பவுண்ட். அக்குழந்தைக்கு பிலிப் என அவர் பெயரிட்டுள்ளார். அலெக்சாண்ட்ராக்கு 1970இல் முதல் குழந்தையும், பிறகு 8 குழந்தைகளும் பிறந்தன. உகாண்டாவில் 70 வயது பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
News March 30, 2025
IPL: டாஸ் வென்ற SRH பேட்டிங்

DC vs SRH அணிகள் விசாகப்பட்டினத்தில் சற்று நேரத்தில் மோத உள்ளன. இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள SRH, ஒன்றில் வென்றுள்ளது. DC ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றது. முன்னதாக 2 அணிகளும் மோதிய 24 ஆட்டங்களில் SRH 13, DC 11 ஆட்டங்களில் வென்றுள்ளன. விசாகப்பட்டினம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் ரன்மழையும் பொழியும் என எதிர்பார்க்கலாம். யார் வெற்றி பெற போறாங்க?