News April 25, 2025
காஷ்மீர் குறித்த கூகிள் Search.. கண்டுக்காத பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலை அடுத்து, கூகிளில் காஷ்மீர் பற்றிய தேடல்கள்தான் கடந்த 3 நாள்களில் அதிகரித்துள்ளது. Google search density அடிப்படையில், இந்தியா 100%, UAE 88%, பூடான் 76% ஆகியவை அதிகமாக தேடியுள்ளன. சம்மந்தப்பட்ட பாகிஸ்தானில் வெறும் 27% தான் காஷ்மீர் குறித்து தேடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நாடுகளான சீனா (13%), அமெரிக்கா (11%), ரஷ்யா (3%) போன்ற நாடுகளில் காஷ்மீர் குறித்து பெரிய தாக்கம் இல்லை!
Similar News
News January 3, 2026
சற்றுமுன்: விஜய்க்கு கடும் எச்சரிக்கை

தவெகவை NDA கூட்டணிக்குள் இழுக்க பல முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், அனுமானங்களின் அடிப்படையில் விஜய் பலமாக இருப்பதாக பேசப்படுவதாக கூறிய தமிழிசை, அனுபவம் மற்றும் ஆட்சியின் அடிப்படையில் பலமாக இருக்கும் பாஜகவோடு விஜய் இணைந்தால் அவருக்கு நல்லது என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு வரவில்லை என்றால் அவருக்கு தான் பிரச்னை எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்
News January 3, 2026
தினமும் 30 நிமிடம் நடந்தால் நிகழும் அதிசயம்!

தினமும் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற உங்கள் புத்தாண்டு சபத உறுதிப்பாட்டில் தளர்வு ஏற்பட்டுவிட்டதா? கவலைப்படாதீங்க. ஜிம் உடற்பயிற்சிகளால், பல நன்மைகள் இருந்தாலும், தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதும் நல்லது என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த DR அமீர்கான். மேலும் நடப்பதால் ஏற்படும் 5 நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளார். அது என்ன என்பதை வலது பக்கம் Swipe செய்து பார்க்கலாம். பிறகென்ன நடப்போமா?
News January 3, 2026
தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின் பிடிவாதம்

தவெகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பரிந்துரை லிஸ்ட்டில் இருப்போர் எவ்வளவு தொகையை தேர்தலுக்கு பயன்படுத்துவர் என்பதை தலைமைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த தொகையுடன், ஒரு பெருந்தொகையை தேர்தல் செலவுக்காக விஜய் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்களின் குடும்பம் கடனில் சிக்கிவிடக் கூடாது என்பதில் விஜய் பிடிவாதமாக உள்ளாராம்.


