News January 20, 2025
காட்டிக் கொடுத்த கூகுள் பே

நடிகர் சயிப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை பிடிப்பதில் கூகுள் பே முக்கிய பங்கு வகித்துள்ளது. சயிப்பை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற அந்நபர், ஒரு கடையில் பரோட்டாவும், ஒரு வாட்டர் பாட்டிலும் வாங்கியுள்ளார். அப்போது ஜிபே பயன்படுத்தி காசு கொடுத்தார். அந்த போன் நம்பரை கண்டறிந்த போலீஸ், அதை மோப்பம் பிடித்து சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அந்நபரை பிடித்து கைது செய்தனர்.
Similar News
News March 13, 2026
Gas charge ₹30.. அலறவிடும் சென்னை ஹோட்டல்ஸ்

வணிக சிலிண்டர் விலை உயர்வு & தட்டுப்பாட்டால் பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ‘Gas Charge’ என்று தனியாக ₹9.50 பில்லில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலும் சில ஹோட்டல்களில் ₹30 கேஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில உணவகங்களில் ₹5 – ₹10 வரை உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
News March 13, 2026
பஸ் சேவைகள், ரயில் உணவுகளில் தட்டுப்பாடா?

பெட்ரோல், டீசல் & கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அரசு பஸ் சேவைகளில் பாதிப்பு, ரயில்களில் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், இவை வதந்தியே என்று TNSTC & IRCTC விளக்கம் அளித்துள்ளன. போதிய டீசல் இருப்பு உள்ளதால் பேருந்து சேவைகளில் பாதிப்பில்லை என்று TNSTC தெரிவித்துள்ளது. அதேபோல், வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களிலும் உணவு தடையின்றி வழங்கப்படுவதாக IRCTC கூறியுள்ளது.
News March 13, 2026
BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்.. இதுவே முதல்முறை

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஜெ.வீரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


