News April 19, 2024
இந்திய ஜனநாயகத்தை பெருமைப்படுத்திய கூகுள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது இந்த சிறப்பு டூடுலில், Google என ஆங்கில மொழியில் உள்ள இரண்டாவது ‘O’-வுக்கு பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பயனர்களும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Similar News
News January 17, 2026
இன்று IND vs BAN.. வெல்லுமா இந்திய இளம் படை?

U19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 2-வது போட்டி இன்று நடைபெற உள்ளது. ஜிம்பாப்வேயில் மதியம் 1 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவுடன் நடந்த முதல் போட்டியில் வெற்றி வாகை சூடிய நிலையில், இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றியை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 5 முறை உலக சாம்பியனான இந்தியா, 6-வது வெற்றியை தொடர முனைப்பு காட்டி வருகிறது.
News January 17, 2026
ELECTION: அதிமுக கோட்டையை தட்டி தூக்கும் திமுக!

கடந்த 2021 தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் திமுக ஒன்றில் கூட வெல்லவில்லை. இந்நிலையில், வரும் தேர்தலில் 7 தொகுதிகளில் வெல்லும் என அக்னி செய்தி நிறுவனம் கணித்துள்ளது. தொண்டாமுத்தூர், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் அதிமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களை அக்னி நிறுவனம் துல்லியமாக கணித்தது குறிப்பிடத்தக்கது.
News January 17, 2026
28 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக

<<18877155>>மஹாராஷ்டிராவில்<<>> நடந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரேக்களின் கோட்டையாக கருதப்பட்ட மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த 1996 முதல் தாக்கரே சிவசேனாவின் மேயரே மும்பையை ஆண்டு வந்த நிலையில், இனி பாஜக மேயர் செங்கோல் ஏந்த உள்ளார். இதன்மூலம் 28 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக கூட்டணி 118, சிவசேனா (தாக்கரே) 65 இடங்களில் வென்றுள்ளது.


