News December 13, 2024
குகேஷிற்கு கூகுள் கொடுத்த கவுரவம்

உலகில் நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில், கூகுள் தனது டூடுலை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வரும். அப்படி தான் தற்போது கூகுள் செஸ் டூடுலை வைத்துள்ளது. இன்று முக்கிய செய்தியாக இருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கவுரவிக்கும் வகையில் தனது டூடுலில் செஸ் விளையாட்டை மையப்படுத்தியுள்ளது. மேலும், குகேஷை பாராட்டும் வகையில் இந்த டூடுல் இடம் பெற்றிருப்பது, நமக்கு கூடுதல் சிறப்பு.
Similar News
News March 5, 2026
எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை: எல்.முருகன்

தமிழ் மொழியை மட்டுமே TN-ல் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். <<19294297>>திருச்சி ரயில்வே அலுவலக சர்ச்சை<<>> குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எங்குமே ஹிந்தியை திணிப்பதில்லை எனக் கூறினார். தமிழ் தான் தொன்மையான மொழி என உலகம் முழுக்க PM மோடி பேசுவதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.
News March 5, 2026
‘VIROSH’ ரிசப்ஷனில் குவிந்த பிரபலங்கள் (PHOTOS)

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனாவின் ரிசப்ஷன் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. நடிகர்கள் கார்த்தி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராணா, ஞானி மற்றும் நடிகைகள் ஸ்ரீலீலா, மிருணாள் தாக்கூர், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். விழாவில் கர்நாடக DCM டிகே சிவக்குமார், கிஷன் ரெட்டி MP, பிஆர்எஸ் தலைவர் KTR உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
News March 5, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவது தான் அறியாமை *எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் *இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ளவேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை *கல்வியும் தவமும் எந்த பிராயத்திலும் தொடங்கலாம்.


