News August 14, 2024
தமிழக அரசின் நல்லாளுமை விருதுகள்

2024ஆம் ஆண்டுக்கான முதல்வரின் நல்லாளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் திட்டப் பணிகளுக்காக CM முகவரித்துறை தலைமை தொழில்நுட்ப அலுவலர் வனிதாவுக்கும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனுக்கும், காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக TN மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குநர் திவ்யதர்ஷினிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
இந்த பெட்ரோலின் விலை லிட்டருக்கு வெறும் ₹71 தான்!

’பெட்ரோல் லிட்டர் ₹71.32-க்கு விற்பனை செய்யப்படும்!’.. இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? கூடிய விரைவில் வரும் என மத்திய அமைச்சர் கட்கரியே கூறியிருக்கிறார். எத்தனால், உள்ளூரிலேயே உற்பத்தியாகும் கரும்பு, சோளம் போன்ற பயிர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செலவு குறைவதால் விலையும் குறைகிறது. இருந்தாலும், இந்த பெட்ரோல் மைலேஜை குறைக்கப்பதாக சிலர் கருதுகின்றனர்.
News August 24, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை..

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம்!, நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
News August 24, 2025
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இன்று காலை 10 மணியில் இருந்து Airtel நெட்வொர்க் சேவை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுமார் 7,000 பேர் X உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள், ஏர்டெல் சேவை மையங்களில் புகாரளித்து வருகின்றனர். இதனையடுத்து, சேவையை மீட்டெடுக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரமும் சில இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டது.