News April 2, 2025
பழைய பஸ்களுக்கு விரைவில் Good Bye: அமைச்சர்

தமிழகத்தில் இயங்கி வரும் பழைய பஸ்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்படுவதாகவும், அந்த வகையில் தற்போது மாநிலம் முழுவதும் 3,500 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு வாரமும் புதிய பஸ்களை கொண்டு பழைய பஸ்கள் மாற்றி இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2025
நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க..

காலை செய்யும் சில நடவடிக்கைகளை நம்மை நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்க உதவிடும் * காலை கடனை செய்யுங்கள், உடல் புத்துணர்ச்சி பெரும் * ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள், செரிமான பிரச்சனையை சரிப்படுத்தும் * சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்காமல், எழுந்ததுமே சில வேலைகளை செய்யுங்கள், அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும் * காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடுங்கள். அதனை பழக்கப்படுத்துங்கள்.
News April 3, 2025
இன்று SRH vs KKR: வெற்றி யாருக்கு?

ஐபிஎல்லின் 15ஆவது லீக் போட்டியில் இன்று SRH vs KKR மோதுகின்றன. கொல்கத்தாவில் மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ள ஹைதராபாத் ஆரஞ்சு படை, இன்றைய போட்டியில் வெல்ல போராடும். அதேபோல் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ள கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வென்று, தன் மீதான களங்கத்தைத் துடைக்க முற்படும் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
News April 3, 2025
‘குட் பேட் அக்லி’ புக்கிங் ஓபனிங் எப்போது?

‘குட் பேட் அக்லி’ வரும் 10ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், நாளை இரவு 8.02 மணிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ பெரிதாக ரசிகர்களைக் கவராத நிலையில், GBU-க்காக அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். அதற்கேற்றார் போல் டீசரும் கொல மாஸாக இருந்தது. 3 கெட்டப்பில் அஜித் நடிப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.