News December 6, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶டிச. – 06 ▶கார்த்திகை – 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை & புனர்பூசம் ▶நட்சத்திரம்: திருவோணம்.

Similar News

News November 25, 2025

வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள்!

image

குமரிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் நாளை ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல்களால் கனமழை வெளுக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

News November 25, 2025

60 KM., வேகத்துக்கு மேல் பஸ் சென்றால் நடவடிக்கை: KKSSR

image

<<18374035>>தென்காசியில்<<>> விபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களின் பர்மிட்டை கேன்சல் செய்திருப்பதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். தனியார் பஸ்கள் இனி 60 கி.மீ., வேகத்துக்கு மேல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்க RTO-க்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News November 25, 2025

டிச.15 வரை கெடு.. OPS-ன் பிளான் இதுவா?

image

தேர்தல் பற்றி டிச.15-ல் இறுதி முடிவு எடுக்கப்படும், அதற்குள் திருந்துங்கள் என EPS-க்கு OPS கெடு விதித்துள்ளார். ஆனால், உண்மையில் இது EPS-க்கான கெடு அல்ல என கூறப்படுகிறது. அதாவது, ஒத்த கருத்துடையவர்களை இணைத்து NDA கூட்டணியில் மீண்டும் சேர OPS திட்டமிடுகிறாராம். டிடிவியிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதனால்தான் டிச.15-ல் முடிவெடுக்கப்படும் என OPS கூறுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!